Published : 20 Jul 2023 05:34 AM
Last Updated : 20 Jul 2023 05:34 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: உங்களின் உழைப்புக்கு ஏற்ப வருமானம் உயரும். பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.

ரிஷபம்: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். தாயாருக்கு மருத்துவ செலவுகள் வரக் கூடும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. பூர்வீக வீட்டுப் பிரச்சினைகள் முடிவுறும்.

மிதுனம்: சகோதரர்களால் பயனடைவீர்கள். பூர்வீக சொத்து உங்கள் கைக்கு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் அதிக கவனம் தேவை. பணவரவு உண்டு.

கடகம்: பணப் புழக்கம் கணிசமாக உயரும். உடல் நிலை சீராகும். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். கணவன் - மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

சிம்மம்: காலை 11 மணி முதல் வேலைகள் தடைபட்டு முடியும். சின்னச் சின்ன பிரச்சினைகள் குடும்பத்தில் தலை தூக்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். கலை பொருட்கள் சேரும்.

கன்னி: தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். பணப் பற்றாக்குறையால் பிறரிடம் கடன் வாங்க வேண்டி வரும். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது அவசியம்.

துலாம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பழைய சொந்த - பந்தங்கள் தேடி வருவார்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள். தியானம் செய்யவும்.

விருச்சிகம்: புது பொறுப்பும், பதவியும் தேடி வரும். அரசாங்க அதிகாரிகளின் நட்புறவு கிட்டும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்.

தனுசு: திடீர் திருப்பங்கள் உண்டாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வெளியூர் பயணம், சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.

மகரம்: காலை 11 மணி முதல் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சுக்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்து போவது நல்லது. புதிய தொழில் தொடங்க முடிவு செய்வீர்கள்.

கும்பம்: நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும். இழுபறியாக இருக்கும் வழக்கு உங்களுக்கு சாதகமாக முடியும்.

மீனம்: பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். விருந்தினர் வருகையால் வீடு களை கட்டும். பழைய பிரச்சினைகளை ஒவ்வொன்றாக தீர்ப்பீர்கள். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x