Published : 15 Jul 2023 06:00 AM
Last Updated : 15 Jul 2023 06:00 AM
மேஷம்: நண்பர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பர். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி கிட்டும். பூர்வீக வீடு தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
ரிஷபம்: காலை 11 மணி முதல் ஊர் பொது விஷயங்களை முன்னின்று நடத்துவீர்கள். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களால் ஆதாயம் அடைவீர்கள்.
மிதுனம்: காலை 11 மணி முதல் அலைச்சல், டென்ஷன் இருக்கும். அவ்வப்போது பகை உணர்வு உண்டாகும். சிலரின் நட்பை முன்கோபத்தால் இழக்க நேரிடும். தாயாருடனும் கருத்து மோதல்கள் வரும். பணவரவு உண்டு.
கடகம்: குடும்பத்திலும் சின்னச் சின்ன விவாதங்கள் வரும். சகோதரர்களாலும் டென்ஷன், ஏமாற்றம் வந்து செல்லும். மறைமுக எதிரிகள் முளைப்பார்கள். யாருக்கும் எதற்காகவும் உறுதிமொழி தருவதைத் தவிர்க்கவும்.
சிம்மம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசி அனைவரையும் ஆச்சர்யப்படுத்துவீர்கள். முகப்பொலிவுடன் காணப்படுவீர்கள். முடியாமல் போன சில காரியங்களை இன்று முடிப்பீர்கள். பொருள் சேரும்.
கன்னி: சோம்பல், குழப்பம், தூக்கமின்மை ஆகியவற்றில் இருந்து விடுபட்டு சுறுசுறுப்பாவீர்கள். வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிய வாகனம் வாங்குவீர்கள்.
துலாம்: காலை 11 மணி முதல் எதிலும் வெற்றி, மகிழ்ச்சி உண்டு. பணவரவும் திருப்திகரமாக இருக்கும். சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
விருச்சிகம்: காலை 11 மணி முதல் பிள்ளைகளுக்கு கொஞ்சம் அலைச்சலும், ஆரோக்கிய குறைவும் வந்து போகும். திடீர் பயணங்களும், செலவுகளும் இருக்கும். யாரிடமும் குடும்ப பிரச்சினைகளை கூறுவதை தவிர்க்கவும்.
தனுசு: உங்கள் செயலில் வேகம் கூடும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம், சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்.
மகரம்: நினைத்த காரியங்கள் அனைத்தும் சுலபமாக நிறைவேறும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பழைய கடன்களில் ஒன்று தீர வழி கிடைக்கும். மகளின் கல்யாணப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும்.
கும்பம்: உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். வெள்ளி ஆபரணங்கள் வாங்குவீர். பழுதான வாகனத்தையும் மாற்றுவீர். புதிய வீடு வாங்குவது எளிதாக நிறைவேறும். குலதெய்வ வழிபாடு நன்மை அளிக்கும்.
மீனம்: விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர். தள்ளுபடி விற்பனையில் புது வாகனம் வாங்குவீர்கள். பழுதானமின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT