Published : 24 May 2023 05:30 AM
Last Updated : 24 May 2023 05:30 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: எதிர்ப்புகள் அடங்கும். வேலைக்கு விண்ணப்பித்து காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு புது வேலை கிடைக்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வர வாய்ப்பு உள்ளது. பணவரவு உண்டு.

ரிஷபம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் கவனம் தேவை.

மிதுனம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். தோற்றப் பொலிவு கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கு வீர். பூர்வீக வீடு, மனையை விற்பனை செய்யலாம்.

கடகம்: தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள்.

சிம்மம்: கணவன் - மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வெளியூர் பயணம், சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள்.

கன்னி: உங்கள் கை ஓங்கும். இலக்கை நோக்கி முன்னேறு வீர்கள். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். பயணங் களால் பயனடைவீர்கள். பூர்வீக இல்லம் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

துலாம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். பிரியமானவர் களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம்.

விருச்சிகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும்.

தனுசு: இனந்தெரியாத சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்.

மகரம்: சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். பழைய வாகனத்தை சரி செய்வீர்கள். சீமந்தம், கிரஹப்பிரவேசம் என்று வீடு களைகட்டும்.

கும்பம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர் கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். நீண்ட நாளாக இருந்த குழப்பம் தீரும்.

மீனம்: அக்கம் - பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். பழைய கடன் பிரச்சினையில் ஒன்று தீரும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். அடுத்தவர் விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x