ம.சுசித்ரா
இதழாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்.
இதழியல் துறையில் 17 ஆண்டுக் கால அனுபவம் மிக்கவர். ‘The Hindu’ ஆங்கில நாளேட்டில் 2007-ஆம் ஆண்டில் சுயாதீன எழுத்தாளராக இதழியல் பயணத்தைத் தொடங்கி தற்போது ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார்.
“A Comparative Study on Derrida’s Deconstruction and Nagarjuna’s Dialectics” எனும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு தத்துவப் புலத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.
கல்வி, சமூக - பண்பாட்டு அரசியல், இசை, சினிமா, மனித உரிமைகள் உள்ளிட்ட புலங்களில் ஈடுபாட்டுடன் எழுதி வருபவர். கல்வி உளவியல் குறித்த, ‘பன்முக அறிவுத் திறன்கள்’ நூலாசிரியர். ‘நான் ஏன் இந்துப் பெண் அல்ல’ நூலை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர். இவர் மொழிபெயர்த்து ‘தமிழ் திசை’ பதிப்பகம் அண்மையில் வெளியிட்ட நூல், ‘பி.ஆர்.அம்பேத்கரின் அறிவுஜீவித வரலாறு’ (552 பக்கங்கள்).
‘தமிழ் விக்கி’ தளத்தில் இவருக்கான பிரத்தியேக பக்கம் அண்மையில் வெளியிடப்பட்டு கவுரவிக்கப்பட்டார் (ம.சுசித்ரா - Tamil Wiki).