

தேர்தல் பிரச்சாரத்துல வெள்ளைச் சட்டை, காக்கி பேன்ட் சகிதமா உலா வந்தாரு, தவெக தலைவர் விஜய். இதனால அவரின் ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள் குஷியாகி ஆளாளுக்கு அதே ‘டிரெஸ் கோட்’ல கிளம்பினாங்க. தமிழ்நாட்டின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள சி.ஜோசப் விஜய், பிளேஸரில் நடை போட்டதும் அது புதிய ‘பிளாஸ்ட்’ லிஸ்டில் சேர்ந்துடுச்சு.
தமிழ்நாட்டுல அரசியல்வாதினாலே கஞ்சி போட்ட விறைப்பான வெள்ளைச் சட்டை, கரைவேட்டிங்கிற பாணியைக் கொஞ்ச காலத்துக்கு முன்னால உதயநிதி ஸ்டாலின் மாத்துனாரு. கேஷுவலாக டி-ஷர்ட்டில் வலம் வந்துக்கிட்டிருக்காரு.
இப்போ, முதல்வர் விஜய்யின் பிளேஸர் ஸ்டைல், ‘தமிழ்நாட்டின் புதிய சிஇஓ’ என டிரெண்டிங் செய்யப்படுது. அப்படி ஆடையிலும் அரசியல் இருக்கு ப்ரோனு காட்டுன சில உலக அரசியல் தலைவர்களைப் பத்திப் பார்ப்போமா!