இலங்கை திரும்புகிறார் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச

By செய்திப்பிரிவு

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச விரைவில் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கை 1948-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரை கண்டிராத பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளது. மக்கள் புரட்சியால் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். ரணில் விக்கிரமசிங்கே இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றியதையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்‌ச தப்பியோடினார். முதலில் மாலத்தீவு சென்ற அவர் அங்கிருந்து சிங்கப்பூருக்குச் சென்றார்.

சிங்கப்பூருக்குச் சென்றபின்னர் அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து நாடாளுமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடந்தது அதில் ரணில் விக்ரமசிங்கே அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச விரைவில் நாடு திரும்புவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதனை கோத்தபய ராஜபக்சவின் உறவினரும் ரஷ்யாவுக்கான இலங்கையில் முன்னாள் தூதரமான உதயங்க வீரதுங்கா உறுதிப்படுத்தினார். டெய்லி மிரர் பத்திரிகைக்கு அவர் அளித்தப் பேட்டியில் கோத்தபய ராஜபக்ச ஆகஸ்ட் 24ல் இலங்கை திரும்பலாம். இருப்பினும் தேதியில் மாற்றம் ஏதும் செய்யப்படவும் வாய்ப்புள்ளதை மறுக்கமுடியது என்று தெரிவித்துள்ளார்.
வீரதுங்கா 2022 பிப்ரவரியில் கைது செய்யப்பட்டார். ராஜபக்ச பாதுகாப்புச் செயலராக இருந்தபோது உக்ரைனிடமிருந்து போர் விமானங்கள் வாங்கியதில் மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டதாக அவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளியில் உள்ளார்.

இலங்கை திரும்பும் கோத்தபய மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவாரா என்ற கேள்விக்கு, "கோத்தபய ராஜபக்ச திறமையான தந்திரமான ராணுவ அதிகாரி. ஆனால் அவருக்கு அரசியல் அறிவு இல்லை. மகிந்த ராஜபக்ச போல் அவர் திறமையானவர் அல்ல. அதனால் மக்கள் மீண்டும் கோத்தபயவை அரசியலில் ஈடுபடும் வாய்ப்பை வழங்கும் முட்டாளகளாக இருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்" என வீரதுங்கா தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

20 mins ago

சினிமா

41 mins ago

தமிழகம்

48 mins ago

வலைஞர் பக்கம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்