கரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத சுமார் 500 பயணிகள் ஜப்பான் கப்பலிலிருந்து நாளை விடுவிப்பு

By செய்திப்பிரிவு

ஜப்பானின் யோககாமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலிலிருந்து கோவிட்-19 (கரோனா வைரஸ்) பாதிப்பு இல்லாத 500 பயணிகள் விடுவிக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், “கோவிட்-19 (கரோனா வைரஸ்) பாதிப்பு இல்லை என்று பரிசோதனையில் கண்டறியப்பட்டதால், சுமார் 500 பயணிகள் வரை நாளை விடுவிக்கப்பட உள்ளனர். இவர்கள் அனைவரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இல்லாதவர்கள்” என்று தெரிவித்துள்ளனர்.

ஜப்பான் கப்பலில் உள்ள பயணிகளில் கோவிட்- 19 எனும் கரோனா வைரஸால் 500க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, ஹாங்காங் நகரத்தில் இருந்து கடந்த வாரம் டைமண்ட் பிரின்சஸ் கப்பல் ஜப்பான் வந்தது. இந்தப் பயணிகள் கப்பலில் மொத்தம் 3,711 பயணிகள் இருந்தனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்தக் கப்பலில் 6 இந்தியப் பயணிகள், 132 பணியாளர்கள் என மொத்தம் 138 இந்தியர்கள் உள்ளனர்.

இந்தக் கப்பல் ஹாங்காங்கில் இருந்து வந்ததால், கோவிட்-19 வைரஸ் பாதிப்பு இருக்கும் எனும் அச்சத்தால், 14 நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் யோககாமா துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். தொடர்ந்து கப்பலில் உள்ள பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தவறவீடாதீர்

பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்: 7 பேர் பலி; பலர் காயம்

கரோனா வைரஸ் பாதிப்பால் இந்திய தொழில்துறையில் தாக்கம்? - மத்திய அரசு ஆலோசனை

ட்ரம்ப் வருகை: அகமதாபாத்தில் ஏற்பாடுகள் தீவிரம்; நகரம் முழுவதும் பேனர்கள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 mins ago

இந்தியா

37 mins ago

தமிழகம்

33 mins ago

இந்தியா

57 mins ago

இந்தியா

44 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

59 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

மேலும்