

பாகிஸ்தானில் மதப் பேரணி ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 7 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், ''பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள குவெட்டா நகரில் நடந்த மதப் பேரணி ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 7 பேர் பலியாயினர்.
25க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரால் இந்த குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இத்தாக்குதலுக்கு இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில் குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தவறவீடாதீர்