பாகிஸ்தானில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் அபிநந்தன், சாரா அலி கான்

By செய்திப்பிரிவு

பாகிஸ்தானில் 2019 ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களில் இந்தியாவின் அபிநந்தன் மற்றும் சாரா அலி கான் இடம்பெற்றுள்ளனர்.

2020 ஆம் ஆண்டு இன்னும் சில வாரங்களில் வரவுள்ள நிலையில் ஒவ்வொரு நாட்டிலும் கூகுளில் அதிக தேடப்பட்டப்பட்டவர்கள் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பாகிஸ்தானில் 2019 ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் முதல் பெயராக இந்தியாவின் அபிநந்தன் 9வது இடத்திலும், பாலிவுட் நடிகை சாரா அலி கான் ஆறாம் இடத்திலும் உள்ளனர்.

இதில் அபிநந்தன் இந்திய விமானப்படையில் விங் கமாண்டராக பணியாற்றி வருகிறார். இந்த ஆண்டு ஆரம்பத்தில் காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் பகுதிக்குள் ஊடுருவி தீவிரவாத முகாம்களை அழித்ததாகக் கூறப்பட்டன. கடந்த பிப்ரவரி 27- தேதி இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் போர் விமானத்தை அபிநந்தன் மிக் 21 ரக விமானத்தில் விரட்டிச் சென்று சுட்டு வீழ்த்தினார்.

இந்த தாக்குதலின்போது பாகிஸ்தான் பகுதிக்குள் அபிநந்தன் சென்ற விமானம் விழுந்தது. பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட அபிநந்தன் பின்னர், மத்திய அரசின் முயற்சியால் உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு கொடுத்த அழுத்தம் காரணமாக விடுவிக்கப்பட்டார்.

சாரா அலிகான் பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் மகள், பத்ரி நாத், சிம்மா ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் இப்பட்டியலில் பிக்பாஸ் 13, கபீர் சிங் மற்றும் கல்லி பாய் ஆகிய இந்திய படங்களும் பாகிஸ்தானியர்களின் தேடுதலில் இடம்பெற்றுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்