தேர்தலில் தலையீடாதீர்கள்: புதினிடம் கிண்டலாகத் தெரிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

By செய்திப்பிரிவு

அடுத்த வருடம் நடைபெறும் அதிபர் தேர்தலில் தலையிட வேண்டாம் என்று ட்ரம்ப் கிண்டலாக புதினிடம் தெரிவித்திருக்கிறார்.

ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி 20 மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதின் இடையே சந்திப்பு  இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

அப்போது ட்ரம்ப் - புதின் பேச்சு வார்த்தைகளுக்கிடையே 

வரும் தேர்தலில் ரஷ்யா தலையிட வேண்டாம் என்று கண்டிப்பீர்களா? என்று பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி கேட்பார்...

அதற்கு ட்ரம்ப் கிண்டலாக சிரித்து கொண்டே புதினிடம் ... ”பிளிஸ்.. தேர்தலில் தலையிடாதீர்கள்” என்று கூறி இருக்கிறார்.

முன்னதாக, கடந்த 2016-ம் ஆண்டில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்பும் போட்டியிட்டனர்.

இதில் ட்ரம்ப் வெற்றி பெற்றார். இந்த தேர்தலின்போது ட்ரம்ப் வெற்றிபெற ரஷ்ய உளவுத் துறை சமூக வலைதளங்களை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் தொடர்பான மின்னஞ்சல்களை வெளியிட ரஷ்யா உதவியது, இது அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்த ட்ரம்ப் வெற்றிக்கு உதவிபுரிந்ததாக அமெரிக்காவில் விசாரணையே நடந்து முடிந்துள்ளது.

அடுத்த வருடம் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்