‘கைட் பிரைனிங் இன்ஸ்டிடியூட்’ - ‘இந்து தமிழ் திசை’ நடத்தும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான ‘பிரைன் பூஸ்டர்’ ஆன்லைன் பயிற்சிப் பட்டறை- நவ.23-ம் தேதி தொடங்குகிறது

By செய்திப்பிரிவு

பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு வேகமான நினைவாற்றல் மற்றும் கணிதத் திறனை அதிகப்படுத்தும் நோக்கிலும், NEET, JEEEஉள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுபவர்களுக்குப் பயனளிக்கும் வகையிலும் ‘பிரைன் பூஸ்டர்’ எனும் ஆன்லைன் பயிற்சிப் பட்டறையை திருச்சியிலுள்ள ‘கைட் பிரைனிங் இன்ஸ்டிடியூட்’, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணைந்து நடத்துகின்றன.

இதில், 9 வயது முதல் 19 வயதுவரையுள்ள பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகள் உட்பட அனைவரும் பங்கேற்கலாம். இந்தப் பயிற்சிப் பட்டறை நவ.23-ம் தேதி தொடங்கி, 29-ம் தேதி வரை தினமும் மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை நடைபெறவுள்ளது.

நினைவாற்றலை அதிகப்படுத்துவதற்கான நுட்பங்கள், கணிதத் திறனை அதிகரித்தல், விரைவான வாசிப்புக்கான நுட்பங்கள், ஆய்வு நுட்பங்கள், தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு பயனளிக்கும் செறிவு நுட்பங்கள் ஆகியவை பயிற்றுவிக்கப்படும்.

இப்பயிற்சி, மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்க உதவுவதோடு, போட்டித் தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளையும் மாணவர்கள் எளிதாக எதிர்கொள்வதற்கு பயன்படும். இந்தப் பயிற்சியை 15 ஆண்டுகள் அனுபவமிக்க நினைவாற்றல் பயிற்சியாளரும் ‘கைட் பிரைனிங் இன்ஸ்டிடியூட்’ இயக்குநருமான எஸ்.தமிழ்செல்வன் வழங்கவிருக்கிறார்.

இதில் பங்கேற்க பதிவுக் கட்டணம் ரூ.885/-. பங்கேற்க விரும்புபவர்கள் https://rb.gy/sviprl எனும் லிங்க்கில் பதிவு செய்துகொள்ள வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 9003966866 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

உலகம்

48 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்