கூடுதல் கட்டணம் வசூலிப்பு உயர் நீதிமன்ற உத்தரவின்படி 9 பள்ளிகள் மீது நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

By செய்திப்பிரிவு

கூடுதல் கட்டணம் வசூலித்ததாக 14 தனியார் பள்ளிகள் மீது வந்த புகாரில், 9 பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக ஈரோட்டில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அணைகள் அனைத்தும் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். கரோனா தொற்று கட்டுப்படுத்துவதில் தமிழகம் சிறப்பாக செயல்படுவதாக பிரதமர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தற்போது சாத்தியமில்லை. கரோனா பாதிப்பு சூழ்நிலைகள் மாறிய பின்புதான், பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வருடன் பேசி முடிவு எடுக்கப்படும். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது. தனிமனித சுதந்திரம் அதிகமாக உள்ளது.

கரோனா பரவல் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்குவது தாமதமாகியுள்ளது. இந்தாண்டு புதியதாக 3 லட்சத்து 24 ஆயிரம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு வழங்குவதற்கான பாட புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளன.

கூடுதல் கட்டணம் வசூலித்ததாக 14 தனியார் பள்ளிகள் மீது புகார்கள் வந்தன. இதில் 9 பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மலைப்பகுதிகள் உட்பட 52 இடங்களில் ஆன்லைன் வகுப்புகளுக்கு சரியாக இணைய வசதி கிடைக்கவில்லை. அங்கு இணைய வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்