பணியாளர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்புக; அண்ணா பல்கலை. உத்தரவால் ஊழியர்கள் கலக்கம்

By கரு.முத்து

வகுப்புகள் எதுவும் தற்போது நடைபெறாத சூழலில் அண்ணா பல்கலைக்கழகம் தனது ஊழியர்களைப் பணிக்கு வர நிர்பந்தப்படுத்துவதாக அதன் ஊழியர்கள் வேதனைப்படுகிறார்கள்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகமும் மாநிலத்தின் இதர பகுதிகளில் உள்ள அதன் உறுப்புக் கல்லூரிகள் பெரும்பாலானவையும் கரோனா தனிமைப்படுத்துதல் முகாம்களாகச் செயல்படுகின்றன. இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பல்கலைக் கழகத்தின் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் அனைவரும் உடனடியாகப் பணிக்கு வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஜூலை 31-ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டு இருப்பதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் பள்ளி, கல்லூரிகளில் தற்போது எந்த வேலையும் நடைபெறாது. சில கல்லூரிகளில், கரோனா தொற்றுக்கு ஆளாகித் தனிமைப்படுத்தப்பட்டவர்களும் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், திருச்சியைச் சேர்ந்த அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி ஊழியர்கள் தரப்பில், ''இந்த இக்கட்டான சூழலில் நாங்கள் கல்லூரிக்குச் சென்று என்ன பணி செய்யமுடியும்? எங்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு'' என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்