பேச்சிப்பாறை, பெருஞ்சாணிக்கு 1,974 கனஅடி தண்ணீர் வரத்து :

By செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. மலையோர பகுதிகளில் மழை பெய்து வருகிறது. பேச்சிப்பாறையில் 20 மிமீ, சுருளகோட்டில் 24, பாலமோரில் 10 மிமீ மழை பெய்திருந்தது. பேச்சிப்பாறை அணைக்கு 1,052 கனஅடி, பெருஞ்சாணிக்கு 922 கனஅடி என, மொத்தம் 1,974 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வருகிறது.

பேச்சிப்பாறை நீர்மட்டம் 43.31 அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து 2,263 கனஅடி தண்ணீரும், பெருஞ்சாணி நீர்மட்டம் 72.95 அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து 2,012 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு ஒன்றில் 16.50 அடி, சிற்றாறு இரண்டில் 16.60 அடி, பொய்கையில் 26.70 அடி, மாம்பழத்துறையாறில் 54.14 அடி, நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையில் முழு கொள்ளளவான 25 அடி தண்ணீர் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

12 mins ago

சினிமா

33 mins ago

தமிழகம்

40 mins ago

வலைஞர் பக்கம்

43 mins ago

தமிழகம்

56 mins ago

சினிமா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்