சக்தி மருத்துவமனையில் - முதியோர் நல மருத்துவ சிகிச்சைப் பிரிவு தொடக்கம் :

By செய்திப்பிரிவு

சக்தி மசாலா நிறுவனத்தின் சார்பில் இயங்கும் சக்தி மருத்துவ மனையில் முதியோருக்கு சிகிச்சையளிக்கும் சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

சக்தி மசாலா நிறுவனத்தின், சக்திதேவி அறக்கட்டளை சார்பில் இயங்கும் சக்தி மருத்துவமனையில் கடந்த18 ஆண்டுகளாக பொது மருத்துவம், எலும்புமுறிவு மருத்துவம், தோல் மருத்துவம், கண் மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், பல் மருத்துவம், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவம், சர்க்கரைநோய் மருத்துவம், மனநல மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம் மற்றும் மூளை நரம்பியல் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இலவச மருத்துவ ஆலோசனைகளை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஏப்ரல் 1- ம் தேதி முதல் முதியோர் நல மருத்துவ சிகிச்சை பிரிவு தொடங்கப் பட்டுள்ளது.

புதிய பிரிவு தொடக்க நிகழ்ச்சியில், சக்தி தேவி அறக்கட்டளை அறங்காவலர்கள் துரைசாமி மற்றும் சாந்தி துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சக்தி மருத்துவமனை மூத்த மருத்துவர் ராஜலட்சுமி புதிய பிரிவைத் தொடங்கி வைத்தார். முதியோருக்கான புதிய பிரிவு பிரதி மாதம் வியாழக்கிழமை அன்று மதியம் 2 மணி முதல் 5 மணிவரை, மருத்துவர் பிரபாகரன் சிகிச்சை குறித்த ஆலோசனை வழங்குகிறார்.

மேலும், முதியோர் ஆரோக்கி யத்தை மேம்படுத்துதல், டிமென்ஷியா - மறதி, நினைவு, சிந்தனையில் ஏற்படும் சீர்குலைவு, மனஅழுத்தம், மனச்சோர்வு, தூக்கமின்மை, கட்டுப்பாடற்ற நிலையில் சிறுநீர் வெளியேறுதல், நடக்கும்போது ஏற்படும் தடுமாற்றம் மற்றும் கீழே விழுதல், வயதான பெண்களுக்கு மாதவிடாய் நின்றபின்னர் ஏற்படும் ஹார்மோன் குறைபாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை வழங்கப்படுகிறது.

புதிய பிரிவு தொடக்க நிகழ்ச்சியில் சக்தி சிறப்புப்பள்ளி மற்றும் சக்தி மறுவாழ்வு மைய குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள், புறநோயாளிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

39 secs ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்