ரயில்வே ஊழியர்களை பாராட்டி பாடல் எழுதிய - கோட்ட மேலாளருக்கு ரயில்வே அமைச்சகம் பாராட்டு :

By செய்திப்பிரிவு

ரயில்வே ஊழியர்களைப் பாராட்டி மதுரை கோட்ட மேலாளர் எழுதிய பாடலை ரயில்வே அமைச்சகம் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கவுரவப்படுத்தியுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை அதிகமாக இருந்தது. இதைச் சமாளிக்க உற்பத்தியாகும் இடங்களில் இருந்தே சிறப்பு ரயில்கள் மூலம் தேவைப்பட்ட பகுதிகளுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லப்பட்டது.

இந்தியா முழுவதும் 424 சிறப்பு ரயில்களில் 30,455 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்பட்ட மருத்துவமனைகளுக்கு வழங்கப் பட்டது.

இதில் தெற்கு ரயில்வே இயக்கிய 75 சிறப்பு ரயில்களும், மதுரை கோட்டத்துக்கு வந்த 7 சிறப்பு ரயில்களும் அடங்கும். இதற்காகப் பாடுபட்ட அனைத்து ரயில்வே ஊழியர்களைப் பாராட்டி ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந் தவரும், மதுரை கோட்ட ரயில்வே மேலாளருமான லலித்குமார் மன் சுகானி இந்தியில் ஒரு பாடலை எழுதியுள்ளார். அவரது மகன் திவ்யன்ஷ் மன்சுகானி, இப்பாடலை இந்தி இசையமைப்பாளர்கள் கல் யாண்ஜி, ஆனந்தி ஆகியோர் 1967-ம் ஆண்டு இசையமைத்த திரைப்படப் பாடல் மெட்டில் பாடி, யூ-டியூப்பில் பதிவு செய்துள்ளார்.

அதில், மதுரை கோட்டத்தில் ஆக்சிஜன் சிறப்பு ரயில்கள் இயக்கம், பாம்பன் பாலத்தில் இயக்கப்படும் ரயில், மதுரை ரயில்வே மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வழங்குவது, அதில் ரயில்வே ஊழியர்கள் பணி யாற்றுவது ஆகியவற்றையும் காட்சிப்படுத்தியுள்ளார்.

இந்தப் பாடலை ரயில்வே அமைச்சகம் பாராட்டி தமது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து, மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் லலித்குமார் மன்சுகானி யை கவுரவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

33 mins ago

உலகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

மேலும்