மஞ்சளாறு அணை 55 அடியை எட்டியது 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

மஞ்சளாறு அணை முழுக் கொள்ளவை எட்ட உள்ளதால் மூன்றாம் கட்ட வெள்ள எச் சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் வரும் 26-ம் தேதி பாசனத்திற்கு நீர் திறக்க அரசிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் தேவ தானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணையின் மொத்த உயரம் 57 அடி ஆகும். கடந்த சில நாட்களாக இங்குள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் தலையாறு, மூலாறு, வரட்டாறுகள் மூலம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

கடந்த வாரம் 50 அடியில் இருந்த நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து நேற்று 55 அடியை எட்டியது.

இதனைத் தொடர்ந்து பொதுப் பணித்துறையினர் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது வினாடிக்கு 146 கனஅடி நீர்வரத்து உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி இந்த நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. அணை நீர் தேவதானபட்டி, கெங்குவார்பட்டி, வத்தலகுண்டு, சிவஞானபுரம் வழியாக செல்வதால் அப்பகுதி கரையோர மக்கள் எச்சரிக்கை யுடன் இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள் ளது.

நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் வரும் 26-ம் தேதி பாசனத்திற்கு நீர் திறக்க தமிழக அரசிற்கு பொதுப்பணித்துறையினர் பரிந்துரை செய்துள்ளனர். இதன் மூலம் தேனி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 148 ஏக்கரும், திண்டுக் கல் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 111 ஏக்கர் என மொத்தம் 5 ஆயிரத்து 259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் வரும் 26-ம் தேதி பாசனத்திற்கு நீர் திறக்க தமிழக அரசிற்கு பொதுப்பணித்துறையினர் பரிந்துரை செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

31 mins ago

உலகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

மேலும்