சிஎஸ்கேவின் இதயத் துடிப்பே தோனிதான் : பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் புகழாரம்

By செய்திப்பிரிவு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் (சிஎஸ்கே) இதயத் துடிப்பு எம்.எஸ்.தோனிதான் என அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் புகழாரம் சூட்டினார்.

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த சீசனில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. தீபக் ஷாகர் அற்புதமாக வீசி 13 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4விக்கெட்கள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார். தீபக் ஷாகர் வீசிய 24 பந்துகளில் 18 பந்துகளில் ரன்கள் ஏதும் சேர்க்கப்படவில்லை. இந்த ஆட்டம் தோனிக்கு, சிஎஸ்கே வீரராக 200-வது ஆட்டமாகஅமைந்தது. போட்டி முடிவடைந்ததும் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியதாவது:

தோனி நீண்ட காலமாக சிஎஸ்கே அணிக்கு விளையாடி வருவதை குறிப்பிட்டாக வேண்டும் மற்றும் அதைப் பாராட்டவும் வேண்டும். 200ஆட்டங்களில் விளையாடிய பின்னரும் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நினைப்பது என்பது,விளையாட்டு மற்றும் அணியைப் பற்றிய அவரது அணுகுமுறைக்கு ஓர்சான்றாகும். அணியும் வளர்ந்துள்ளது, அதனுடன் தோனியும் வளர்ந்துள்ளார். இது சிறந்த உறவாகும். சிஎஸ்கேவின் இதயத் துடிப்பு தோனி,இதில் எந்த சந்தேகமும் இல்லை.

முதல் ஆட்டத்துக்குப் பிறகு தீபக்ஷாகர் திரும்பி வந்த விதம் உண்மையிலேயே கவனத்தை ஈர்த்தது. பந்துகள் லேசாக ஸ்விங் ஆகும்போதும், நகர்வுகள் இருக்கும்போதும் தீபக் ஷாகர் சிறப்பாக செயல்படுவார். முதல் பந்தில் இருந்தே தீபக் ஷாகர் ஸ்விங் செய்யும் திறன் கொண்டவர். அணி சமநிலையுடன் அமைந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். ருதுராஜ் கெய்க்வாட் சிறந்த வீரர். முதல் ஆட்டத்தில் அவர், சிறந்த பந்தில்தான் ஆட்டமிழந்திருந்தார்.

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடினமான சூழ்நிலைகள் இருந்தன. இது 220 ரன்கள் குவிக்கக்கூடிய ஆடுகளம் இல்லை. மிகவும் வித்தியாசமான ஆடுகளம். ருதுராஜ் மீதுகடந்த சீசனில் நம்பிக்கை வைத்திருந்தோம், அவரது திறனும் வெளிப்பட்டிருந்தது. எங்களது சித்தாந்தமே ஒரு வீரரை தேர்வு செய்து அணிக்குள் கொண்டுவரும்போது அவர்களை ஆதரிக்கவேண்டும் என்பதுதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

நேரலை: ஸ்டார்ஸ்போர்ட்ஸ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

16 mins ago

தமிழகம்

23 mins ago

வலைஞர் பக்கம்

26 mins ago

தமிழகம்

39 mins ago

சினிமா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்