புதுச்சேரி: தாலியை திருப்பித் தர லஞ்சம் பெற்ற 2 சப் இன்ஸ்பெக்டர்களுக்கு சிறை

By செய்திப்பிரிவு

பெண் கடத்தல் வழக்கில் மீட்கப் பட்ட பெண்ணின் தாலி மற்றும் நகைகளை திருப்பித் தர லஞ்சம் வாங்கிய சப் இன்ஸ்பெக்டருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், உடந்தையாக இருந்த மற்றொரு சப் இன்ஸ்பெக்டருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து புதுவை சிறப்பு நீதிமன்றம் தீர்ப் பளித்தது.

புதுவை மாநிலம், வில்லியனூர் அருகே உள்ள அரியூர் அனந்த புரத்தைச் சேர்ந்தவர் பழனி. விவசா யம் செய்து வந்தார். கடந்த 19.7.2010ல் இவரது மனைவி தமிழ்ச்செல்வியை, அதே பகு தியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடத்திச் சென்றார். தேடுதலின் போது காரைக்கால் பகுதியில் அடைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பழனி கொடுத்த புகாரின் பேரில், வில்லியனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி காரைக்காலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்ச்செல்வியை போலீஸார் மீட்டனர்.

அப்போது, தமிழ்ச்செல்வி அணிந்திருந்த தாலி செயின், அரை பவுன் தங்க மோதிரம் ஆகிய வற்றைப் பறித்து வைத்துக் கொண்ட வில்லியனூர் போலீஸார், இதனை திருப்பி வழங்குவதற்கு பழனியிடம் ரூ.3 லட்சம் வரை லஞ்ச மாகக் கேட்டுள்ளனர். இதையடுத்து சென்னையில் உள்ள சிபிஐ போலீஸில் பழனி புகார் கொடுத்தார். இதனையடுத்து, சிபிஐ அதிகாரிகள் ஆலோசனைப்படி கடத்தல் வழக்கை விசாரித்து வந்த வில்லியனூர் சப் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடாஜலபதி, சரவணன் ஆகியோரை பழனி சந்தித்தார். மனைவியின் தாலி செயினையும், தங்க நகையையும் தருமாறு கேட் டுள்ளார். அவர்கள் தர மறுத் துள்ளனர். அப்போது ரூ.10 ஆயி ரத்தை சப் இன்ஸ்பெக்டர் வெங்கடா ஜலபதியிடம், பழனி கொடுத்தார். அதை அவர்கள் வாங்கியுள்ளனர்.

அதையடுத்து, சப் இன்ஸ் பெக்டர்கள் வெங்கடாஜலபதி, சரவணன் ஆகியோரை அங்கு மறைந்திருந்த சிபிஐ போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை புதுவை சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி வேல்முருகன், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், மற்றொரு சப் இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், அவர்கள் இருவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார். இதனையடுத்து, வெங்கடாஜலபதி, சரவணன் ஆகியோர் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

19 mins ago

சினிமா

40 mins ago

தமிழகம்

47 mins ago

வலைஞர் பக்கம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்