ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை வழக்கு: மேலும் 4 தனிப்படை அமைப்பு

By செய்திப்பிரிவு

சேலம் - சென்னை ரயிலில் ரூ.5.78 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் புதிதாக 4 தனிப்படைகள் அமைத்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலத்தில் இருந்து சென்னைக்கு 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 8-ம் தேதி வந்த ரயிலில் தனிப்பெட்டியில் ரூ.323 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் கொண்டு வரப்பட்டன. அந்த ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு ரூ.5.78 கோடி பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தடயம் சிக்கவில்லை

வங்கி அதிகாரிகள், பார்சல் நிறுவன ஊழியர்கள், ரயில்வே ஊழியர்கள், பாதுகாப்புக்கு வந்த போலீஸார் என பலதரப்பு நபர்களிடம் விசாரணை நடத்தியும் சிபிசிஐடி போலீஸாருக்கு எந்த தடயமும் சிக்கவில்லை. இந்தியா முழுவதும் இருந்து பிரபல ரயில் கொள்ளையர்கள் 14 பேரை பிடித்து விசாரணை நடத்தியும் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. இதுவரை இந்த வழக்கில் முக்கியமான தடயங்கள் சிக்காத நிலையில் விசாரணையில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.

ரூ.2 லட்சம் பரிசு

இதனால், இந்த கொள்ளை வழக்கு குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று சிபிசிஐடி போலீஸார் கடந்த மாதம் அறிவித்தனர்.

அதைத் தொடர்ந்து சில தகவல்கள் சிபிசிஐடி போலீஸாருக்கு கிடைத்துள்ளன. அதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக 20 பேர் கொண்ட 4 தனிப்படையை சிபிசிஐடி போலீஸார் அமைத்துள்ளனர். தனிப்படையினர் விசாரணையை மீண்டும் தொடங்கியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

உலகம்

37 mins ago

சினிமா

58 mins ago

தமிழகம்

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்