விழுப்புரத்தில் பெண் கவுன்சிலரை கத்தியால் குத்தி 42 சவரன் நகை கொள்ளை

By செய்திப்பிரிவு

விழுப்புரத்தில் அதிமுக பெண் நகர்மன்ற உறுப்பினரை கத்தியால் குத்தி 42 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அரசு ஊழியர் குடியிருப்பு அருகே, அரசு கலை கல்லூரி சாலையைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மனைவி சுமதி விழுப்புரம் நகர்மன்ற 39 வார்டு உறுப்பினர். நேற்று பிற்பகல் சுமதி வீட்டின் முன்பக்க கதவை பூட்டிக்கொண்டு தூங்கிக்கொண்டு இருந்துள்ளார்.

அப்போது பின்பக்கம் வழியாக உள்ளே வந்த ஒருவர் சுமதியை தட்டி எழுப்பி, அவரது கழுத்தில் கத்தியை வைத்து வீட்டில் உள்ள நகைகளை எடுத்து கொடுக்குமாறு மிரட்டியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த சுமதியின் கழுத்து, முதுகு பகுதியில் கத்தியால் குத்தியுள்ளார். இந்தத் தாக்குதலில் சுமதி மயங்கியுள்ளார். பின்னர் அந்த நபர் பீரோவை திறந்து அதிலிருந்த 42 சவரன் நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியுள்ளார்.

சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்த சுமதி வெளியே வந்து கூச்சலிட்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இத்தகவல் அறிந்த ஏடிஎஸ்பி ராஜராஜன் தலைமையிலான போலீஸார் கவுன்சிலர் சுமதியின் வீட்டுக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

கவுன்சிலர் சுமதிக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவரது கணவர் பன்னீர்செல்வம் விழுப்புரம் வடக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளராக உள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

கருத்துப் பேழை

13 mins ago

கருத்துப் பேழை

19 mins ago

கருத்துப் பேழை

27 mins ago

இந்தியா

35 mins ago

இந்தியா

44 mins ago

உலகம்

55 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

58 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

மேலும்