அதிமுக பிரச்சார பாடல் குறுந்தகடு: தொகுதிக்கு 300 அனுப்ப ஏற்பாடு

By செய்திப்பிரிவு

அதிமுக சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள பிரச்சார பாடல்கள் கொண்ட குறுந்தகடுகள், தலைமை அலுவலகத்தில் இருந்து தொகுதிக்கு 300 என்ற அளவில் அனுப்பப்பட்டு வருகிறது.

அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து கடந்த 9-ம் தேதி சென்னையில் பிரச்சாரத்தை தொடங்கினார் முதல்வர் ஜெயலலிதா. 3-வது நாளாக நேற்று தருமபுரியில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசினார். கடந்த 11-ம் தேதி விருத்தாச்சலத்தில் நடந்த 2-ம் நாள் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கட்சியின் பிரச்சார பாடல்கள், சாதனைகள் அடங்கிய குறுந்தகடுகளை ஜெயலலிதா வெளியிட்டார்.

அந்த குறுந்தகடுகளில் இருந்து தற்போது ஆயிரக்கணக்கில் பிரதிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. தொகுதிக்கு 300 என்ற அடிப்படையில் குறுந்தகடுகள் அனுப்பப்பட்டு வருகிறது. ‘‘கிராமங்களில், பிரச்சாரத்தின்போது இந்த பாடல்களை ஒலிக்கச் செய்வர். இதுதவிர அதிமுக அரசின் சாதனை தொடர்பான தகவல்களும் குறுந்தகடில் இடம் பெற்றுள்ளன’’ என அதிமுக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

49 mins ago

உலகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்