ஹெச்.ராஜாவை கண்டித்து திருப்புவனம் பாஜக கிளைகள் ஒட்டுமொத்தமாக கலைப்பு

By செய்திப்பிரிவு

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவைக் கண்டித்து சிவகங்கை மாவட்டம், திருப்பு வனம் மேற்கு ஒன்றிய பாஜக தலைவர் பாலமுருகன் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் இந்த ஒன்றியத்தில் உள்ள 59 கிளைகளும் ஒட்டுமொத்தமாகக் கலைக்கப்பட்டன.

சமீபத்தில் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா தோல்வியடைந்தார். இதற்கு கட்சி நிர்வாகிகளே காரணம் என ஹெச்.ராஜா தரப்பில் கூறியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து சிவகங்கை மாவட்ட பாஜக தலைவர் செல்வராஜ், தனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் மாநிலத் தலைமைக்கு அனுப்பினார். மேலும் காரைக்குடி தொகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் பலரும் பதவியை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் மாவட்டத்தலைவர் செல்வராஜூக்கு ஆதரவாக மாவட்டத்தில் உள்ள மற்ற நிர்வாகிகளும் ராஜினாமா செய்து வருகின்றனர். திருப்புவனம் மேற்கு ஒன்றியத் தலைவர் பாலமுருகன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் அந்த ஒன்றியத்தில் 59 கிளைகளும் கலைக்கப்பட்டன.

இதுகுறித்து பாலமுருகன் கூறியதாவது: செல்வராஜின் அணுகுமுறையால்தான் மாவட்டத்தில் கட்சி வளர்ந்தது. ஹெச்.ராஜாவின் தோல்விக்கு செல்வராஜை தொடர்புபடுத்துவதை பாஜக நிர்வாகிகள் பலர் விரும்பவில்லை என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

50 mins ago

உலகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்