கரோனா தொற்று பாதிப்பு அதிகமாகும் சூழலில் மதுரையில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு: தலைமை செயலர், சுகாதாரத்துறை செயலர் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

மதுரையில் கரோனா பாதிப்பு அதிகமாகும் சூழலில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பிற்பகல் நடைபெறுகிறது.

மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோரை அரசு நியமித்துள்ளது. கடந்த 2 நாட்களாக ஆட்சியர், ஆணையர், டீன், சுகாதாரத்துறை இயக்குநர் ஆகியோரிடம் கரோனா பாதிப்பு, உடனடித் தேவைகள், மருந்துகள் உள்ளிட்ட விவரங்களை அமைச் சர்கள் கேட்டறிந்தனர்.

மதுரையில் கடந்த 2 வாரங் களாக நோயாளிகள் போதிய படுக்கைகள், மருந்துகள் இல் லாமல் மருத்துமனைகளில் தவிப் பதும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல் அதி களவில் உயிரிழப்பதும் தெரிய வந்தது.

இது குறித்து உள்ளூர் அமைச்சர்கள் நேற்று முன்தினம் உடனடியாக முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்குக் கொண்டு சென் றனர். இதையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலர் இறையன்பு, சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை மதுரைக்குச் சென்று ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடக்கிறது.

இக்கூட்டத்தில் மதுரைக்கு உடனடியாகத் தேவையான ஆக்சிஜன் படுக்கை வசதிகள், அவற்றை எந்தெந்த இடங்களில் நிறுவலாம் என்பது குறித்து ஆலோ சிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறி யதாவது:

மதுரை மீனாட்சி கல்லூரி, ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட ஒரு மினி கரோனா மருத்துவ மனையாக மாற்றப்படுகிறது. அதுபோல், அமெரிக்கன் கல்லூரி, லேடி டோக் கல்லூரிகளில் கரோனா சிகிச்சைக்கான கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது.

கரோனா சிறப்பு மருத்துவம னையாகச் செயல்படும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவம னையின் கீழ் தளத்தில் உள்ள வாகன நிறுத்தும் பகுதியிலும் கரோனா சிகிச்சை படுக்கைகள் ஏற்படுத்தப்படுகின்றன. மதுரைக்கு நாளொன்றுக்கு 30 டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. அவற்றைத் தட்டுப்பாடின்றி வழங்க கூட்டத்தில் கோரப்படும்.

நோயாளிகள் ஆக்சிஜன் படுக்கை வசதிக்காக எக்காரணம் கொண்டும் காத்திருக்கும் நிலை இருக்கக் கூடாது. மதுரையின் நிலைமை கைமீறிச் செல் வதால் முதல்வர் ஏற்பாட்டின் பேரில் இந்தக் கூட்டம் நடத்தப் படுகிறது. இதன்மூலம் கரோனா நோயாளிகளுக்கு வரும் நாட்களில் எவ்விதத் தடையுமின்றி சிகிச்சை கிடைக்க வாய்ப்புள்ளது, என்று கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்