விடுதலை செய்வதாக அறிவிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு: நவ.11 வரை மீண்டும் காவல் நீட்டிப்பு

By செய்திப்பிரிவு

விடுதலை செய்வதாக அறிவிக்கப் பட்ட தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் நவ. 11-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த செப். 22-ம் தேதி முதல் அக். 14-ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் ராமநாதபுரம், புதுக் கோட்டை, நாகை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 86 மீனவர்கள் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் மீன் பிடித்துக் கொண் டிருந்தபோது 7 வெவ்வேறு சம்ப வங்கள் மூலமாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப் பட்டனர்.

இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா 7 முறை கடிதம் எழுதினார். இலங்கை சிறையில் வாடும் அப்பாவி தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்தக் கடிதங்களில் அவர் வலியுறுத்தியிருந்தார். இந்த விவகாரத்தில் பிரதமர் நேரடியாக தலையிட்டு, தமிழக மீனவர்களைக் கைது செய்யும் இலங்கை கடற்படையினரின் நட வடிக்கைகளைத் தடுத்து நிறுத்த வும் கோரியிருந்தார்.

இந்த முயற்சிகளின் காரணமாக இலங்கை சிறைகளில் வாடும் 86 தமிழக மீனவர்கள்

அக். 28-ம் தேதி இலங்கை அரசால் விடுவிக்கப்படுவார்கள் என மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து இலங்கை சிறை களில் உள்ள தமிழக மீனவர் களை விரைவில் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார். மேலும் மத்திய அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க தமிழக சிறை யில் உள்ள 2 இலங்கை மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் அக். 28-ம் தேதி விடுதலை செய்யவும் உத்தரவிட்டார்.

இந்நிலையில், கடந்த அக். 13-ம் தேதி சிறைபிடிக்கப்பட்டு அனுராதபுரம் சிறையில் அடைக்கப் பட்டிருந்த 24 ராமேசுவரம் மீனவர்களுக்கும், அக். 18-ம் தேதி சிறைபிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகை மீனவர்கள் 9 பேருக்கும் புதன்கிழமையுடன் நீதிமன்ற காவல் முடிவடைந்தது. இந்த நிலையில் மீண்டும் மன்னார் மற்றும் பருத்தித்துறை நீதிமன்றங்களில் மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு நவ. 11-ம் தேதி வரையிலும் 2-வது முறையாக காவல் நீட்டிக்கப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

புதன்கிழமை விடுதலை செய் வதாக அறிவிக்கப்பட்ட மீனவர் களுக்கு இலங்கை நீதிமன்றங்கள் மீண்டும் காவல் நீட்டிப்பு செய்யப் பட்டு சிறைகளில் அடைக்கப்பட் டிருப்பது தமிழக மீனவர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

புதன்கிழமை விடுதலை செய்வதாக அறிவிக்கப்பட்ட மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றங்கள் மீண்டும் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பது தமிழக மீனவர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

2 hours ago

கல்வி

3 hours ago

இந்தியா

3 hours ago

ஓடிடி களம்

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்