தமிழகம் புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: கடலோர மாவட்டங்களில் சில நேரம் கனமழை: வானிலை ஆய்வு மையம்

By செய்திப்பிரிவு

வடகிழக்கு பருவமழை இன்று முதல் தமிழகம் மற்றும் புதுவையில் கடலோரப் பகுதிகளில் தொடங்குயதால் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:

“வடகிழக்கு பருவமழை இன்று முதல் தமிழகம் மற்றும் புதுவையில் கடலோரப் பகுதிகள், தென் தமிழகம் தெற்கு கேரளா, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் துவங்கியுள்ளது. அடுத்து வரும் 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் கேரளாவின் இதர பகுதிகள் ராயலசீமா மற்றும் தெற்கு கர்நாடக பகுதிகளில் துவங்கும்.

தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை இலங்கைமுதல் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சியானது தென் தமிழக பகுதிகளில் நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புழலில் 11 செ.மீ. மழையும், கேளம்பாக்கத்தில் 10 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

அடுத்து வரும் 2 தினங்களை பொறுத்தவரையில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்களில் ஓரிருமுறை கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை இடைவெளிவிட்டு சிலமுறை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

6. 7 தேதிகளில் தமிழகத்தில் புயல் கடக்கும் என்று தகவல் வருகிறதே?

இப்போதைக்கு வடகிழக்கு பருவமழை பற்றி இந்திய வானிலை ஆய்வு மைய அளித்த தகவல் இது.

கடந்த ஆண்டை ஒப்பிடும்போது வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு எப்படி இருக்கும்?

கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை குறித்த நீண்டகால வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் அளவு கணிக்கப்பட்டுள்ளது. அப்படி பார்க்கும்போது இயல்பான அளவு 44 செ.மீ என்று கணிக்கப்பட்டுள்ளது. இயல்பைவிட அதிகம் என கணிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

கல்வி

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்