ஆதார் தகவல்களின் பாதுகாப்புக்கு உயர்ந்த முக்கியத்துவம் தரப்படுகிறது: கனிமொழி கேள்விக்கு மத்திய அரசு பதில்

By செய்திப்பிரிவு

நாடாளுமன்ற மாநிலங்களவை யில் திமுக குழுத் தலைவர் கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் அளித்த எழுத்துபூர்வமான பதிலில் கூறியிருப்பதாவது:

"சில ஊடகங்களில் ஆதார் தகவல் கசிவு என்று செய்திகள் வந்துள்ளன. ஆனால், ஆதாருக் காக தகவல்களைச் சேகரித்து வைத்திருக்கும் இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையத்தில் இருந்தோ, மத்திய அடையாள தகவல் களஞ்சியத்தில் இருந்தோ தகவல்கள் கசியவில்லை. ஆதார் ஆணையத்தின் தகவல்கள் மிகவும் வலுவான பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

ஹேக்கிங் போன்ற தகவல்களைக் கையாளும் தொழில் நுட்ப மோசடிகளை எதிர்கொள்ளும் வகையில் ஆதார் ஆணையத்தின் தகவல்கள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. குறிப் பாக ஆதார் தகவல்களின் பாதுகாப்புக்கு இந்திய அரசும் ஆணையமும் மிக உயர்ந்த முக்கியத்துவம் தருகின்றன. ஆதார் ஆணையம் தனது உள்கட்டமைப்பினைச் சர்வதேச தரத்தில் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. பல அடுக்குகள் கொண்ட தொழில் நுட்பத்தரத்தை ஆணை யம் தொடர்ந்து பராமரிக்கிறது.

பொது மக்களின் தனியுரிமை தகவல்களைப் பாதுகாப்பதே ஆதார் ஆணையத்தின் அச்சாணியான கோட்பாடாகும். குறைந்தபட்ச தகவல், கூட்டமைக்கப்பட்ட தரவுத் தளம், நம்பகத்தன்மை ஆகியவையே ஆதார் ஆணையத்தின் முக்கிய மான கோட்பாடுகள்.

மக்களின் தகவல் களஞ்சியம் கண்காணிப்புக்கும் கட்டுப்பாட்டுக்கும் தொடர்ந்து உட்படுத்தப்படுகிறது. ஆதார் தகவல் மையங்கள் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் தீவிர மான பாதுகாப்பில் இருக்கின்றன. சட்ட ரீதியாகவும் ஆதார் தகவல்கள் முழுமையான பாதுகாக்கப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்