டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான 3x3 கூடைப்பந்து தகுதி சுற்று போட்டியை மார்ச் மாதம் இந்தியாவில் நடத்த முடிவு: 40 அணிகள் கலந்து கொள்கின்றன

By செய்திப்பிரிவு

புதுடெல்லி

டோக்கியோ ஒலிம்பிக்கில் முதன் முறையாக அறிமுகமாகும் 3x3 கூடைப் பந்து போட்டிக்கான தகுதி சுற்று இந்தியாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் என சர்வதேச கூடைப் பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு மற்றும் ஹைதரா பாத்தில் இரு ஆசிய கோப்பை தொடர்களை வெற்றிகரமாக நடத் தியதன் அடிப்படையில் ஒலிம்பிக் போட்டி தகுதி சுற்று ஆட்டங்களை இந்தியாவில் நடத்த முடிவு செய் துள்ளதாக சர்வதேச கூடைப் பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

ஜப்பான் தலைநகரான டோக்கி யோவில் அடுத்த ஆண்டு ஜூலை 24-ம் தேதி ஒலிம்பிக் திருவிழா தொடங்குகிறது. இந்த விளை யாட்டுத் திருவிழாவில் இம்முறை புதிதாக 3 பேர் கலந்து கொள்ளும் கூடைப் பந்து போட்டி சேர்க்கப்பட் டுள்ளது. ஆடவர் பிரிவில் 8 அணி களும், மகளிர் பிரிவில் 8 அணிகளும் கலந்து கொள்ள உள்ளன.

இந்நிலையில் இந்த போட்டிக் கான தகுதி சுற்று அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் நடை பெறும் என சர்வதேச கூடைப் பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது. இந்திய கூடைப் பந்து சங்கத்தின் ஆதரவுடன் இந்த தகுதி சுற்று ஆட்டங்கள் நடத்தப்பட உள்ளது. போட்டி நடைபெறும் தேதி, இடம் ஆகியவை பின்னர் அறிவிக்கப் படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகுதி சுற்றில் 20 ஆடவர் அணிகள், 20 மகளிர் அணிகள் கலந்து கொள்கின்றன. இரு பாலரிடம் இருந்து தலா 3 அணிகள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகும். சர்வதேச கூடைப் பந்து சம்மேளனத்தின் தரவரிசைப் பட்டியல், உலக கோப்பை தொடரின் முடிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதி சுற்றில் கலந்து கொள்ளும் அணிகள் தேர்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்