இந்திய அணியை வீழ்த்தும் திறன் பாக்.அணிக்கு உள்ளது: யூனிஸ் கான் நம்பிக்கை

By ஏஎன்ஐ

சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தும் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஜூன் 4ஆம் தேதி, இந்திய-பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இதுகுறித்து பேசிய முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யூனிஸ் கான், "பாகிஸ்தான் அணிக்கு சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவை வீழ்த்தும் திறன் உள்ளது. இதற்கு முன்னரும் பாகிஸ்தான் இந்தியாவை பலமுறை வீழ்த்தியிருக்கிறது. களங்கள் நன்றாக இருக்கின்றன. 400 எடுத்தாலும் எளிதாக கடந்துவிடலாம் போல இருக்கிறது.

’பீல்டிங்’ தான் ஒருநாள் போட்டியிலும், டி20 போட்டியிலும் வெற்றிக்கான முக்கிய காரணியாக இருக்கிறது. பாகிஸ்தான் பீல்டிங்கல் அதிக கவனம் செலுத்த வேண்டும். எந்த வாய்ப்பையும் விட்டுவிடக்கூடாது.

சர்பராஸ் அகமதுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. அவர் அணியை முன்னெடுத்துச் செல்வதில்தான் அணியின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது" என்று கூறியுள்ளார்.

இதற்கு முன் பாகிஸ்தான் இந்தியாவை 2 முறை சாம்பியன்ஸ் டிராபியில் வீழ்த்தியுள்ளது. ஆனால் உலகக் கோப்பை மற்றும் டி20 கோப்பை தொடர்களில் 11 போட்டிகளில் இந்தியா 10 முறை பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 mins ago

தமிழகம்

15 mins ago

வலைஞர் பக்கம்

18 mins ago

தமிழகம்

31 mins ago

சினிமா

54 mins ago

வாழ்வியல்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்