வெற்றிப் பாதைக்கு திரும்புவது யார்? ஹைதராபாத் - மும்பை இன்று மோதல்

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளுமே தங்களது முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த நிலையில் இன்றைய ஆட்டத்தை எதிர்கொள்கின்றன. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது.

ஜஸ்பிரீத் பும்ராவின் அபாரமான பந்து வீச்சையும் ரோஹித் சர்மா, டெவால்ட் பிரெவிஸ் ஆகியோரது சிறப்பான மட்டைவீச்சையும் மும்பை அணியில் உள்ள மற்ற வீரர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளத்தவறினர். அதேவேளையில் ஹர்திக் பாண்டியா 7-வது வீரராக களமிறங்கியது அனைவருக்கும் ஆச்சரியம் அளித்தது. இன்றைய ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங் வரிசையில் மாற்றம் இருக்கக்கூடும்.

பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது முதல் ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோல்வி கண்டிருந்தது. இன்றைய ஆட்டத்தில் டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்களான மயங்க் அகர்வால், அபிஷேக் சர்மா ஆகியோரும் நடுவரிசை பேட்ஸ்மேன்களான ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம், அப்துல் சமத் ஆகியோரும் பொறுப்புடன் செயல்பட்டு ரன்கள் குவித்தால் மும்பை அணிக்கு சவால் கொடுக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

7 mins ago

சினிமா

27 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

48 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

வணிகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

உலகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்