காஷ்மீருக்குள் 18 தீவிரவாதிகள் ஊடுருவல்: 3 பேர் சுட்டுக்கொலை

By பிடிஐ

தீவிரவாத பயிற்சி பெற்ற 18 பேர் கடந்த ஏப்ரல் மாதம் காஷ்மீருக்குள் ஊடுருவியதாகவும், அவர்களில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக வும், பாதுகாப்புப் படை வட்டாரங் கள் தெரிவிக்கின்றன.

எல்லையில் பாதுகாப்புப் பணிகளை கவனிக்கும் பல்வேறு அமைப்புகளின் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் டெல்லியில் அண்மையில் நடந்தது. காஷ்மீரின் வடக்கே குப்வாரா பகுதி வழியாக எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து, 18 தீவிரவாதிகள் கடந்த ஏப்ரல் மாதம் காஷ்மீருக்குள் ஊடுருவியதாக அந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இதை மறுத்த ராணுவ அதிகாரிகள், 10 தீவிரவாதிகள் மட்டுமே ஊடுருவியதாகவும், அதில் 3 பேர் குப்வாரா மாவட்டத் தில் லோலாப் அருகே புத்ஷாய் என்ற இடத்தில் ஏப்ரல் 21-ம் தேதி பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் கூறினர்.

ஆனால், ராணுவ அமைச்சகத் தின் தொழில்நுட்ப புலனாய்வுப் பிரிவினர் தங்களிடம் உள்ள தகவலின் படி, ஏப்ரல் 12-ம் தேதி தார்ட்போரா கிராமத்தின் வழியாக, 12 தீவிரவாதிகளும், ஏப்ரல் 17-ம் தேதி லோலாப் பகுதியில் இருந்து, 6 தீவிரவாதிகளும் ஊடுருவியதாக திட்டவட்டமாக தெரிவித்தனர்.

பயிற்சி பெற்ற இந்த தீவிரவாதி கள் பந்திபோராவைக் கடந்து, காஷ்மீரின் மத்திய மற்றும் தெற்கு பகுதியை இந்நேரம் அடைந்திருக்கக் கூடும் என்றும் புலனாய்வு அதிகாரிகள் சுட்டிக் காட்டினர்.

இதை உறுதி செய்யும் வகை யில், பந்திபோராவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ உஸ்மான் மஜித், கிராமப் பகுதியில் அடை யாளம் தெரியாத மர்ம மனிதர்களின் நடமாட்டம் இருப்ப தாக, தொகுதி மக்கள் தன்னிடம் தெரிவித்ததாகக் கூறிவருகிறார்.

குளிர்காலங்களில் காஷ்மீரில் தீவிரவாதிகளின் ஊடுருவல் குறை வாக இருப்பது வழக்கம். எனினும் இந்தாண்டு குளிர்காலம் முன்னதாகவே முடிந்துவிட்டதால், இந்த சூழலை தீவிரவாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன் படுத்தி, ஊடுருவலை தொடங்கி விட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

கருத்துப் பேழை

18 mins ago

தொழில்நுட்பம்

1 min ago

கருத்துப் பேழை

24 mins ago

கருத்துப் பேழை

32 mins ago

இந்தியா

40 mins ago

இந்தியா

49 mins ago

உலகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

மேலும்