தடுப்பூசி போடும் பணியில் கடைசி இடத்தில் மே.வங்கம்

By செய்திப்பிரிவு

கரோனா தடுப்பூசி தொடர்பாக செப்டம்பர் 1-ம் தேதி வரையிலான புள்ளிவிவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி நாடு முழுவதும் தடுப்பூசிக்கு தகுதிவாய்ந்த 93.8 கோடி மக்களில் 54 சதவீதம் பேருக்கு தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டுள் ளது. இதில் 99.6 சதவீத மக்களுடன் இமாச்சல் முதலிடத்தில் உள்ளது.

இதற்கடுத்த இடங்களில் உத்தராகண்ட் (81.19%), கேரளா (80.14%), குஜராத் (71.85%), மத்திய பிரதேசம் (70.69%) ஆகிய மாநிலங்கள் உள்ளன. இந்த வரிசையில் 41.16 சதவீத மக்களுடன் மேற்கு வங்கம் கடைசி இடத்தில் உள்ளது. இம்மாநிலத்தில் தடுப்பூசிக்கு தகுதிவாய்ந்த சுமார் 7 கோடி மக்களில்இதுவரை 3.03 கோடி பேருக்கு மட்டுமே முதல் டோஸ் செலுத்தப் பட்டுள்ளது. இவர்களில் 39 சதவீதம் பேருக்கு இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி முதல் டோஸில் இமாச்சல் முதலிடத்தில் இருந் தாலும் 2-வது டோஸில் பின் தங்கியுள்ளது. இம்மாநிலத்தில் 32 சதவீதம் பேருக்கு மட்டுமே 2-வது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நாட்டில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில், மேற்கு வங்கம் 9.13 கோடி மக்களுடன் 4-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் மக்கள்தொகை விகிதாச்சார அடிப் படையில் தடுப்பூசி ஒதுக்கீடு இல்லை என்ற அதிகாரிகள் தெரி விக்கின்றனர். - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

கல்வி

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்