காவிரியில் திறக்கும் நீர் 10,000 கனஅடியாக குறைப்பு

By இரா.வினோத்

கர்நாடகாவின் குடகு, கேரளாவின் வயநாடு பகுதிகளில் கடந்த வாரம்கனமழை பெய்ததால் காவிரி,கபிலா ஆற்றில் வெள்ள‌ப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகியஅணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் இரு அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்தது. தற்போது மழை அளவு குறைந்துள்ளதால் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக குறைந்துள்ளது.

நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 124.80 அடி உயரம் உள்ள‌கிருஷ்ணராஜசாகர் அணையின்நீர்மட்டம் 100 அடியை நெருங்கியுள்ளது. இந்த அணையில் இருந்து விநாடிக்கு 2,076 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

மைசூரு மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 2284 அடி உயரம் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 2283.15 அடியாக உள்ள‌து. எனவே, அணையின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 9,550 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.

கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழகத்துக்கு 17 ஆயிரம் கனஅடி நீர்திறக்கப்பட்டது. தற்போது அணைகளுக்கு நீர்வரத்து குறைந்ததால் தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்