70 டன் எடை சாதனம், 1,700 கிமீ தொலைவு, 10 மாத பயணத்துக்கு பிறகு கேரளா வந்தடைந்த 74 சக்கர ராட்சத கன்டெய்னர் லாரி

By செய்திப்பிரிவு

எழுபது டன் எடையுள்ள சாதனத்தைசுமந்தபடி 10 மாத பயணத்துக்குப் பிறகு கேரளா வந்தடைந்தது 74 சக்கர ராட்சத கன்டெய்னர் லாரி. இது கடந்துவந்த பயண தொலைவு சுமார் 1,700 கிமீ.

வழக்கமாக இவ்வளவு தொலைவை கடக்க சரக்கு வாகனத்துக்கு 7 நாள் போதும். கரோனாவைரஸ் தொற்றால் அமலுக்குவந்த ஊரடங்கு, பழுதடைந்த சாலைகள், பராமரிப்பற்ற பாலங்கள் போன்ற காரணங்களால் பயண காலம் 10 மாதம் ஆகியுள்ளது.

எழுபது டன் எடை கொண்ட ஆட்டோ கிளேவ் என்ற சாதனத்துடன் கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கிலிருந்து இந்த வாகனம் புறப்பட்டது. சேர வேண்டிய இடம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்.

இதுசென்ற வழி நெடுகிலும் மற்ற வாகனங்கள் ஓரங்கட்டப்பட்டன. ஆட்டோ கிளேவ் சாதனம் நவீனதொழில்நுட்ப இயந்திரம் என்பதால் போலீ்ஸ் வாகனங்களும் பயணம் முழுவதும் பாதுகாப்பாக பின்தொடர்ந்தன. சாலை பழுதடைந்திருந்தால் சீர்செய்யப்பட்டு இதன் பயணத்துக்கு வழிசெய்யப்பட்டது. மரக்கிளைகள் குறுக்கிட்டால் அவை வெட்டப்பட்டன. மின் கம்பங்கள் தடை செய்தால் அவை பெயர்க்கப்பட்டன. இரு இடங்களில் இவ்வளவு பாரத்தை தாங்கும் அளவுக்கு பாலம் வலுவுடன் இல்லாத காரணத்தால் இரும்புஉத்திரங்கள் நிறுவி வாகனத்தின் பயணம் தொடர வழிசெய்யப்பட்டது.

இந்த சாதனத்தை விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திடம் ஒப்படைக்கும் பொறுப்பு தனியார்நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் ஊழியர் சுபாஸ் யாதவ் என்பவர் தமது பயணம் பற்றி கூறும்போது, “ஊரடங்கு எங்களது பயணத்தைபெரும் சிரமத்துக்கு உள்ளாக்கியது. ஆந்திராவில் ஊரடங்கு காரணமாக எமது பயணம் ஒரு மாதம் தடைபட்டது. விண்வெளி ஆய்வு நிறுவனம் தலையிட்டு அதற்கு தீர்வு கண்டபோதும் வேறு பல இன்னல்களை எதிர்கொண்டோம். பயணத்தின்போது பிரச்சினை ஏற்பட்டால் சரிசெய்ய பொறியாளர்கள் உள்ளிட்ட 30 பேர் கொண்ட குழு பின்தொடர்ந்துவந்தனர்.

கேரளா வந்தடைந்தபோது ஒரு பெண்மணி ‘விண்ணுக்கு ராக்கெட் ஏவுவதா இப்போது முக்கியம். கரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க வழி தேடுங்கள்' என்று கூறி எங்களை தடுமாற வைத்தார். இந்த வாகனத்துடன் வந்த நாங்கள் பயணம் முழுவதும் நடந்தே வந்தோம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்