டெல்லி நச்சுக்காற்று விவகாரம்: அரசை இதற்குப் பொறுப்பாக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி, பிடிஐ

டெல்லி காற்று மாசுபாடு பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் உச்ச நீதிமன்றம் புதனன்று கூறும்போது, அரசை நிச்சயம் இதற்குப் பொறுப்பாக்க வேண்டும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

டெல்லியில் உள்ள கோடி மக்களின் வாழ்வா சாவா விவகாரம் இது. இந்த மக்கள் தொகை கடுமையான காற்று மாசுபாட்டின் பலன்களை அனுபவித்து வருகின்றனர், இதற்கான பொறுப்பை அரசே ஏற்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த விஷயத்தில் கேள்வி எழுப்பும் போது, “மக்கள் இது போன்று மடிய நாம் அனுமதிக்க முடியுமா? நாடு 100 ஆண்டுகளுக்குப் பின்னால் செல்வதை அனுமதிக்க முடியுமா?

நாம் அரசை இதற்குப் பொறுப்பாக்க வேண்டும். ஏன் அரசு எந்திரம் சுள்ளிகளைப் போட்டு எரிக்கும் செயலை ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை?

மாநில அரசுகள் ஷேமநல அரசு என்ற கருத்தாகத்தை மறந்து விட்டன. ஏழை மக்கள் பற்றி அரசுகள் கவலைப்படுவதில்லை, இது துரதிர்ஷ்டமானது. நாட்டின் ஜனநாயக அரசு சுள்ளிகள் எரிப்பு விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொண்டு மாசுபாட்டைத் தடுக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், இது கோடி மக்களின் வாழ்வா சாவா விவகாரம். நாம் அரசை இதற்குப் பொறுப்பாக்க வேண்டும்” என்றார்.

இந்த அமர்வின் இன்னொரு நீதிபதியாக தீபக் குப்தா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

28 mins ago

விளையாட்டு

45 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்