2016-ல் பாகிஸ்தான் ராணுவத்தினால் பிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட இந்திய ராணுவ வீரர்: ராஜினாமா ஏன் என்று விளக்கம்

By செய்திப்பிரிவு

துலே (மகாராஷ்டிரா), பிடிஐ

2016ம் ஆண்டு கவனக்குறைவினால் எல்லையைத் தாண்டி பாகிஸ்தானுக்குள் சென்று பிடிபட்டு பிற்பாடு விடுவிக்கப்பட்ட சந்து பாபுலால் சவான் என்ற ராணுவ வீரர் தான் ஏன் ராணுவத்திலிருந்து விலகினார் என்பதை விளக்கியுள்ளார்.

“நான் பாகிஸ்தானிலிருந்து வந்த பிறகு தொடர்ந்து ராணுவத்தினால் தொல்லைக்குள்ளாக்கப்பட்டேன். என்னை சந்தேகக் கண் கொண்டே பார்த்தனர். அதனால்தான் பொறுப்பை ராஜினாமா செய்ய நேரிட்டது” என்று தெரிவித்தார் சவான்.

அகமெட்நகர் யூனிட் கமாண்டருக்கு சவான் தன் ராஜினாமா கடிதத்தை அனுப்பியதாக அவருக்கு நெருங்கியர்கள் கூறுகின்றனர்.

சவானை பாகிஸ்தான் ராணுவம் பிடித்துச் சென்று 4 மாதங்களுக்கு அவரை சிறையில் வைத்து அடி, உதை என்று சித்ரவதை செய்துள்ளனர், இந்தியாவிடம் ஒப்படைக்கும் முன்பாக அவர் கொல்லப்படும் அபாயமும் இருந்தது.

கடந்த மாதம் மகாராஷ்டிரா மாநிலம் துலே மாவட்டத்தின் போஹ்ரிவிர் என்ற ஊரில் இவர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற போது சாலைக்குழியில் வண்டி இறங்க விபத்து ஏற்பட்டு பயங்கர காயமடைந்தார், அதாவது முகம், தலை என்று அவருக்கு ஆழமான காயங்கள் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த விபத்தில் அவரது 4 பற்கள் உடைந்தன, கண் இமைக்குக் கீழே பெரிய சிராய்ப்பு, உதடு கிழிந்தது. அந்தக் காயத்திலிருந்து அவர் மீண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் தான் ஏன் ராஜினாமா செய்ய நேரிட்டது என்பதை அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

உலகம்

58 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்