ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் கைது: தேர்தலை புறக்கணிக்க அழைப்பு விடுத்ததால் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தலை புறக்கணிக்க அழைப்பு விடுத்ததையடுத்து பிரிவினைவாத தலைவர் முகமது யாசின் மாலிக்கை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

ஸ்ரீநகரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக மாலிக்கை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜேகேஎல்எப்) தலைவ ரான மாலிக் இதுகுறித்து கூறும் போது, “அபு குஜார் பகுதியில் உள்ள எங்கள் அலுவலகத்துக்கு வந்த போலீஸார் என்னையும், எங்களது கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் சிலரையும் கைது செய்தனர்” என்றார்.

ஜம்மு காஷ்மீரில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித் துள்ளது. இந்நிலையில், சையது அலி கிலானி, மிர்வைஸ் உமர் பாரூக் உள்ளிட்ட பிரிவினைவாத தலைவர்களும் தேர்தலை புறக் கணிக்குமாறு அழைப்பு விடுத்துள் ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, தேர்தலை சீர் குலைக்கும் முயற்சியை பாது காப்புப் படையினர் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என மாநில காவல் துறை தலைவர் கே.ராஜேந்திர குமார் கூறியிருந்தார்.

மாலிக் ஆதரவாளர்கள் போராட்டம்

யாசின் மாலிக் கைது செய்யப் பட்டதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் ஸ்ரீநகரில் போராட் டத்தில் ஈடுபட்டனர். அதைத் தடுக்க முயன்ற போலீஸார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து, ஆர்ப்பாட்டக் காரர்களை கலைப்பதற்காக போலீஸார் தடியடி நடத்தியதுடன் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்