24 மணி நேரத்தில் 622 மிமீ: ஒரே இடத்தில் 36 ஆண்டுகாலத்தில் இல்லாத பேய்மழை

By செய்திப்பிரிவு

மேற்கு ஒடிசாவில் உள்ள பர்லா என்ற நகரில் ஞாயிறு காலை முடிந்த 24 மணி நேரத்தில் 622 மிமீ மழை பதிவாகியுள்ளது. இது கடந்த 36 ஆண்டுகளில் இல்லாத பேய்மழையாகும். இதனால் பலபகுதிகள் நீரில் மூழ்கின.

இந்த அதிகன மழைக்கு இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர். கடலுக்குள் சென்ற 3 மீனவர்கள் காணவில்லை.

பர்லாவில் உள்ள ஹிராகுத் அணைத்திட்டத்தின் தலைமைக் கட்டுப்பாட்டு அறை இம்மாநிலத்தில் ஒரே நாளில் ஒரே இடத்தில் அதிக மழையளவு பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ஒடிசாவின் சராசரி மழைப் பதிவு 81.3மிமீ.

11 மீனவர்கள் மீட்பு:

பாலசோர் மாவட்டம் கீர்த்தானியாவிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 17 பேர் கொண்ட குழுவில் 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று 2 மீனவர்கள் நீந்திக் கரை சேர்ந்தனர். ஆனாலும் 3 மீனவர்கள் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை.

கலிமாட்டி கிராமத்தில் வெள்ள நீரில் பெண் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

34 mins ago

சினிமா

55 mins ago

தமிழகம்

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்