மற்ற வங்கி ஏடிஎம்-களை பயன்படுத்த கட்டுப்பாடு: மூன்று முறை இலவசம்

By செய்திப்பிரிவு

மற்ற வங்கி ஏ.டி.எம்.களை பயன் படுத்துவதில் ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக் கிறது. இதுவரை மற்ற வங்கி ஏடிஎம் களை மாதத்துக்கு 5 முறை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த எண்ணிக்கையை மூன்றாக ரிசர்வ் வங்கி குறைத்திருக்கிறது. இது ஆறு மெட்ரோ நகரங்களில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பொருந்தும்.

சென்னை, பெங்களூரு, ஹைத ராபாத், மும்பை, கொல்கத்தா மற்றும் டெல்லி ஆகிய ஆறு நகரங்களில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்குதான் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறிய மற்றும் அடிப் படை சேமிப்பு வசதி மற்றும் நோ-பிரில்ஸ் வங்கி கணக்குகளுக்கு இது பொருந்தாது. மேலும் தங்களது கணக்கு இருக்கும் வங்கிகளின் ஏடிஎம்களை மாதத்துக்கு ஐந்து முறை இலவச மாக பயன்படுத்திக் கொள் வதற்கு வங்கிகள் அனுமதிக்க வேண்டும். இதற்கு மேல் பயன் படுத்தும்போது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வங்கிகள் கட்டணம் வசூலித்துக் கொள்ள லாம். ஆனால் இந்த கட்டணம் 20 ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.

மேலும் இந்த நடவடிக் கைகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும் இலவச பரிவர்த்தனை எவ்வளவு இருக்கிறது என்பதை வாடிக்கை யாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியிருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

34 mins ago

சினிமா

55 mins ago

தமிழகம்

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்