கடவுளுக்கு நன்றி, இந்த அரசின் கடைசி பட்ஜெட் இதுதான்: ப.சிதம்பரம் விமர்சனம்

By செய்திப்பிரிவு

நிதிப்பற்றாக்குறை பரீட்சையில் அருண் ஜேட்லி தோல்வியடைந்து விட்டார், கடவுளுக்கு நன்றி, இந்த அரசின் கடைசி பட்ஜெட் இதுவே என்று காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ப.சிதம்பரம், “அனைத்துப் பற்றாக்குறைகளும் பட்ஜெட் கணிப்புகளைத் தாண்டிச் சென்று விட்டது. ஏற்றுமதிகளைப் பெருக்க எந்த திட்டங்களும் இல்லை. குடும்பச் சுகாதாரத்துக்காக ரூ.5 லட்சம் என்பது பெரிய ‘ஜும்லா’.

2017-18-ல் நிதிப்பற்றாக்குறை வரம்பு 3.2% என்பது மீறப்பட்டு தற்போது 3.5% ஆகக் கணிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கான பட்ஜெட் என்கிறார், ஆனால் விவசாயிகளின் வருமானம் அதிகரிப்பதற்கு எந்த ஒரு அறிகுறியும் தெரியவில்லை. விவசாயிகள் துயரம் தொடரும்.

இந்த அரசின் கடைசி பட்ஜெட் இது, இதற்காகக் கடவுளுக்கு நன்றி” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

26 mins ago

க்ரைம்

30 mins ago

இந்தியா

28 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

மேலும்