காங்கிரஸின் ஊழல் தொடர்கிறது: பாஜக குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

காங்கிரஸ் கட்சி இப்போதும் ஊழல் பாதையிலேயே பயணம் செய்கிறது என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக அந்த கட்சியின் செய்தித் தொடர்பாளர் சாம்பிட் பத்ரா டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறிய தாவது:

மத்தியில் காங்கிரஸ் கட்சி கடந்த 4 ஆண்டுகளாக ஆட்சி, அதிகாரத்தில் இல்லை. ஆனால் அந்த கட்சி ஆட்சி, அதிகாரத்தில் இருந்தபோது நடைபெற்ற ஊழல் விவகாரங்கள் இன்றுவரை தொடர்கின்றன. பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சுயேச்சை எம்எல்ஏவான மதுகோடா காங்கிரஸ் ஆதரவில் ஜார்க்கண்ட் முதல்வராகப் பதவி வகித்தார். பெயரளவுக்கு மட்டுமே அவர் முதல்வராக இருந்தார். ஆட்சி, அதிகாரம் முழுவதும் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையிடம் இருந்தது. காங்கிரஸுக்கு புதிய தலைவர், பழைய தலைவர் யார் வந்தாலும் அந்த கட்சியின் செயல்பாடுகள் ஒருபோதும் மாறாது. அந்தக் கட்சி இப்போதும் எப்போதும் ஊழல் பாதையிலேயே பயணம் செய்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவராக நேற்று பொறுப்பேற்ற ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார். அதற்குப் பதிலடியாக காங்கிரஸ், ஊழல் கட்சி என்று பாஜக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

29 mins ago

சினிமா

50 mins ago

தமிழகம்

57 mins ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்