இறுதிகட்ட படப்பிடிப்பில் ரெமோ மும்முரம்

By ஸ்கிரீனன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ரெமோ' படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'ரெமோ'. கீர்த்தி சுரேஷ், சதீஷ், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான ஆர்.டி.ராஜா தனது 24 AM ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் பிரதான காட்சிகள் அனைத்தையும் சென்னையிலே படமாக்கினார்கள். ஒரு சில முக்கிய காட்சிகளை மட்டும் விசாகப்பட்டினத்தில் படமாக்கினர். தற்போது இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.

இதில் 'ஐ' படத்தில் ஒப்பனைக்கலை நிபுணராக பணியாற்றிய ஷான் ஃபூட், சிவகார்த்திகேயனுக்கு பிரத்யேகமாக மேக்கப் போட்டிருக்கிறார். இம்மாதம் இப்படத்தில் இருந்து ஒரே ஒரு பாடலை மட்டும் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

மேலும், இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் பட வெளியீடு குறித்து விரைவில் அறிவிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்