பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு: தமிழக அரசுடன் கைகோத்துள்ள சூர்யா

By ஸ்கிரீனன்

பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு தொடர்பான குறும்படத்தில் நடித்துள்ளார் சூர்யா. இதற்காக தமிழக அரசுடன் கைகோத்துள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'என்.ஜி.கே' மற்றும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாற்றான்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. இதில், கோடை விடுமுறைக்கு 'என்.ஜி.கே' வெளியாகும் எனத் தெரிகிறது.

இப்படத்தின் படப்பிடிப்புகளுக்கு இடையே, தமிழக அரசுடன் கைகோத்து பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வுக் குறும்படம் ஒன்றில் நடித்துள்ளார் சூர்யா. மேலும், தனது 2டி நிறுவனத்தின் மூலமாக அதனைத் தயாரித்தும் உள்ளார்.

ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்தது. தற்போது பல கடைகள் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டு இருந்தாலும், சில கடைகள் இன்னும் உபயோகப்படுத்தப்பட்டுதான் வருகிறது. இதனால், பிளாஸ்டிக்கால் வரும் தீமைகளை குழந்தைகளுக்கு எடுத்துரைப்பது போல் அக்குறும்படம் அமைந்துள்ளது.

'தமிழக முதல்வர் வழிகாட்டுதலுடன்' எனத் தொடங்கும் இக்குறும்படத்தில், ஒரு பள்ளியின் வகுப்பறைக்கு சூர்யா செல்கிறார். அங்கு நாம் சேர்ந்து சாப்பிடலாமா, நீங்கள் வைத்திருக்கும் சாப்பாடு ரொம்ப நன்றாக இருக்குமாமே என்று கேட்டவுடன்,  அனைத்துக் குழந்தைகளும் டிபன் பாக்ஸை எடுத்து மேசையின் மீது வைக்கிறார்கள்.

'நம்ம மட்டும் ஹெல்த்தியாக சாப்பிட்டுவிட்டு மற்றவர்களுக்கு விஷத்தைப் போடப் போகிறோம் இல்ல. நாம் உபயோகப்படுத்தும் SINGLE USE PLASTICS எல்லாமே விஷம் தான்' என்று சூர்யா கூறி, அப்படியென்றால் என்ன, அதனை எப்படி தவிர்ப்பது, வேறு என்ன உபயோபடுத்துவது என்று குழந்தைகளுக்கு விளக்கிச் சொல்லிக் கொடுக்கிறார்.

'நம்ம வாழ்ற பூமியை பசுமையாகவும், பாதுகாப்பாகவும் அடுத்த தலைமுறைக்கு ஒப்படைப்பது நம் அனைவருடைய கடமை. ஒரு தடவை மட்டுமே உபயோகப்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை அறவே தவிர்ப்போம். நிறைய மரங்கள் வளர்ப்போம். பசுமைக்கு வழிவகுப்போம்' என்று சூர்யா பேசுவதோடு அக்குறும்படம் முடிவடைகிறது.

'மாறலாம், மாற்றலாம்' என்ற பெயரில் 2டி நிறுவனத்தின் யூ-டியூப் பக்கத்தில் இந்தக் குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது. இக்குறும்படத்தை ஹரிஷ் இயக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இக்குறும்படத்தை முழுமையாக காண:

சூர்யா குறும்படம் 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

கல்வி

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்