திருமணம் குறித்த வதந்தி: ட்விட்டரில் தமன்னா ஆவேசம்

By ஸ்கிரீனன்

தனக்கு திருமணமாக இருப்பதாக வதந்தி பரப்பியவர்களுக்கு, தனது ட்விட்டர் பக்கத்தில் தமன்னா ஆவேசமாக பதிலளித்திருக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் தமன்னா. விரைவில் அமெரிக்க வாழ் உடற்பயிற்சியாளர் ஒருவரை தமன்னா திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகின. சமூகவலைத்தளத்தில் இச்செய்தி பரவலாக பகிரப்பட்டு வந்தது. பலரும் தமன்னாவின் ட்விட்டர் கணக்கை மேற்கோளிட்டு கேள்வி எழுப்பி வந்தனர்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் சிறு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமன்னா கூறியிருப்பதாவது:

ஒருநாள் நடிகர், மற்றொரு நாள் கிரிக்கெட் வீரர், இப்போது டாக்டர். இந்த வதந்திகள் நான் ஏதோ கணவன்மார்களைத் தேடி கடைகடையாக அலைவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. காதல் வயப்பட்டுள்ளேன் என்ற கருத்தை நான் விரும்பினாலும் என் சொந்த வாழ்க்கை என்று வரும்போது இத்தகைய ஆதாரமற்ற செய்திகளை ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன்.

நான் இப்போது மகிழ்ச்சியாக தனியாக இருக்கிறேன், என்னுடைய பெற்றோரும் மாப்பிள்ளை தேடும் படலத்தில் இல்லை. இப்போதைக்கு என் காதல் எல்லாம் என்னுடைய சினிமா பணிகள்தான். நான் பட ஷூட்டிங்கில் தீவிரமாக இருக்கும் போது எங்கிருந்து இது போன்ற வதந்திகள் கிளம்புகின்றன என்பது எனக்கு உண்மையில் ஆச்சரியமாக இருக்கிறது.

இது உண்மையில் முன் அனுமானமானது, மரியாதைக் குறைவானது. நான் எப்போது அந்தப் பாதையில் செல்வேன் என்பதை நானே உலகிற்கு அறிவிப்பேன். திருமணம் புனிதமானது. எனவே, இது பற்றி இத்தனை யூகங்கள் தேவையில்லை. நான் மீண்டுமொருமுறை உறுதியாகக் கூறுகிறேன்.

என் திருமணம் இப்போதைக்கு இல்லை, இவை அனைத்தும் யாரோ ஒருவரது கற்பனையாகும். வதந்திகள் உடனடியாக நிறுத்தப்பட்டாக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தமன்னா தெரிவித்திருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

57 mins ago

உலகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்