கச்சா எண்ணெய் விலை 4 நாட்களுக்கு பிறகு குறைவு

By செய்திப்பிரிவு

உலக அளவில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின்சார உற்பத்தி சரிந்து அதன் விலை உயர்ந்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை இன்று குறைந்துள்ளது.

கரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவது, தடுப்பூசி செலுத்துவதை அதிகரிப்பது போன்ற காரணங்களால் கச்சா எண்ணெய்க்கான உலகளாவிய தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் உற்பத்தியை அதிகரிக்கவில்லை.

மேலும் சூறாவளி தாக்கியதால் அமெரிக்க வளைகுடா மெக்ஸிகோ பகுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தியை பாதித்தன.இதனாலும் கச்சா எண் ணெய் தேவை அதிகரிப்பால் விலை உயர்ந்து வருகிறது.

உலகளாவிய எரிசக்தி நிறுவனங்கள் தங்கள் கையிருப்பில் இருந்து அதிக கச்சா எண்ணெயை விற்பனை செய்துள்ள நிலையில் உற்பத்தி அதிகரிக்க வில்லை. அமெரிக்க கச்சா எண்ணெய் நிறுவனங்கள் மூன்று ஆண்டுகளில் குறைந்தபட்ச கையிருப்பை வைத்துள்ளன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில தினங்களுக்கு முன்பு மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவு பீப்பாய் 80 டாலர்களாக உயர்ந்தது. பின்னர் இது 83 டாலரை எட்டியது. இது நவம்பர் 2014 க்குப் பிறகு அதிகபட்ச விலையாகும்.

கடந்த சில வாரங்களாக இந்தியா, சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் நிலக்கரி பற்றாக்குறையால் மின்சார உற்பத்தி குறைந்துள்ளது. சீனாவின் முக்கிய தொழில்துறையில் மின் பற்றாக்குறை காணப்படுகிறது. நிலக்கரி விலை 10% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

உலக அளவில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின்சார உற்பத்தி சரிந்து அதன் விலை உயர்ந்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை இன்று குறைந்துள்ளது.

நான்கு நாட்களில் கச்சா எண்ணெய் விலை முதல் முறையாக வீழ்ச்சியடைகின்றன. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 0.3%குறைந்து 83.39 டாலராகவும், அமெரிக்க எண்ணெய் 0.4%குறைந்து 80.19 டாலராகவும் இருந்தது.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 mins ago

தமிழகம்

19 mins ago

வலைஞர் பக்கம்

22 mins ago

தமிழகம்

35 mins ago

சினிமா

58 mins ago

வாழ்வியல்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்