இவரைத் தெரியுமா?- கினி ரோமெட்டி

By செய்திப்பிரிவு

உலகின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி. 2012-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

1981-ம் ஆண்டு ஐபிஎம் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தவர். இந்நிறுவனத்தில் மூத்த துணைத்தலைவர் பொறுப்பிலும் இருந்துள்ளார்.

2006-ம் ஆண்டிலிருந்து 2009-ம் ஆண்டு வரை அமெரிக்கன் இண்டர்நேஷனல் குரூப் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர். அமெரிக்காவின் வெளியுறவு குழுவிலும் இருந்துள்ளார்.

ஜெனரல் மோட்டார்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பில் இருந்தவர்.

2013-ம் ஆண்டு போர்ப்ஸ் வெளியிட்ட 100 சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 12-வது இடத்தைப் பிடித்தவர்.

ஐபிஎம் குளோபல் சர்வீஸ் நிறுவனத்தின் சர்வதேச விற்பனை பிரிவிற்கு பொது மேலாளர் பொறுப்பில் இருந்தவர்.

அமெரிக்காவில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

பார்ச்சூன் நிறுவனம் வெளியிட்ட 50 சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் இடம் பிடித்தவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்