மின்சார வாகனங்களுக்கு பதிவு கட்டணத்தில் இருந்து விலக்கு: வரைவு அறிவிப்பு வெளியீடு

By செய்திப்பிரிவு

பேட்டரியால் இயக்கப்படும் வாகனங்களுக்கு (BOV) பதிவுச் சான்றிதழை பெறுவதற்கும், புதுப்பிப்பதற்குமான கட்டண விலக்கு அளிக்கும் வரைவு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் 2021 மே 27-ம் தேதியிட்ட வரைவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் பேட்டரியால் இயக்கப்படும் வாகனங்களுக்கு (BOV) பதிவுச் சான்றிதழைப் (ஆர்.சி) பெறுவதற்கும், புதுப்பிப்பதற்கும், புதிய பதிவு அடையாளத்தை ஒதுக்குவதற்குமான கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இதற்கான உத்தேசத்துடன் மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989ஐத் திருத்துவதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மின் இயக்கத்தை ஊக்குவிக்க இது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு அறிவிப்பை வெளியிட்ட நாளிலிருந்து முப்பது நாட்களுக்குள் பொது மக்களிடமிருந்தும் மற்றும் அனைத்து பங்குதாரர்களிடமிருந்தும் கருத்துகள் கோரப்பட்டுள்ளன.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

உலகம்

50 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்