தற்சார்பு இந்தியா; ரூ.40 ஆயிரம் கோடியில் புதிய உர உற்பத்தி ஆலைகள்: 2023-க்கு பின் இறக்குதி தேவை இருக்காது

By செய்திப்பிரிவு

இறக்குமதிகள் மீது சார்ந்து இருப்பதை குறைப்பதற்காக தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ரூபாய் 40 ஆயிரம் கோடியில் புதிய உர உற்பத்தி ஆலைகள் நிறுவப்பட்டு கொண்டிருப்பதால், 2023-க்குள் உரங்கள் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடையும் என்று மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் சதானந்த கவுடா கூறினார்.

கர்நாடக விவசாயிகளுக்காக இஃப்கோவால் ஏற்பாடு செய்யப்பட்ட 'தற்சார்பு இந்தியா மற்றும் நிலையான விவசாயம்' என்னும் இணைய வழியிலான கருத்தரங்கில் பேசும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

"உள்ளூர் தொழில்களை ஊக்கப்படுத்துவதற்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா லட்சியத்தின் படி, அனைத்து உர நிறுவனங்களையும் வாயு சார்ந்த தொழில் நுட்பத்திற்கு மாற்றி வருகிறோம்," என்று அவர் கூறினார்.

"நாட்டில் உள்ள நான்கு உர நிறுவனங்களுக்கு (ராமகுண்டம், சிந்திரி, பரவுணி மற்றும் கோரக்பூர்) சமீபத்தில் புத்தாக்கம் அளித்துள்ளோம். 2023-க்குள் உரங்கள் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடையும்," என்று அமைச்சர் மேலும் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

17 mins ago

தமிழகம்

24 mins ago

வலைஞர் பக்கம்

27 mins ago

தமிழகம்

40 mins ago

சினிமா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்