இன்போசிஸ் கோரிக்கை

By செய்திப்பிரிவு

எங்களுக்கு சிறப்பு பொருளாதார மண்டல (எஸ்இஇஸட்) அஸ்தஸ்து கொடுங்கள் அல்லது நாங்கள் கட்டிய முன் பணத்தை திருப்பி கொடுங்கள் என்று மேற்கு வங்க அரசிடம் கேட்டிருக்கிறது இன்போசிஸ் நிறுவனம்.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ராஜர்ஹட் என்னும் இடத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க முந்தைய கம்யூனிச அரசு வாக்குறுதி கொடுத்தது. அதன் மூலம் 15,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று நாங்கள் உத்தரவாதம் கொடுத்தோம். இந்த நிலைமையில் முந்தைய அரசு கொடுத்த வாக்குறுதியை தற்போதைய அரசு நிறைவேற்றவில்லை என்று இன்போசிஸ் நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

நிலம் வாங்குவதற்காக மேற்கு வங்க அரசிடம் 75 கோடி ரூபாயை கொடுத்திருக்கிறோம். இந்த பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என்று நம்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எஸ்பிபிஜே 0.15% வட்டி குறைப்பு

பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் பிகானீர் அண்ட் ஜெய்பூர் தன்னுடைய அடிப்படை வட்டி விகிதத்தை 0.15 சதவீதம் குறைத்திருக்கிறது. இதன் மூலம் வங்கியின் அடிப்படை வட்டி விகிதம் 10.10 சதவீதமாக உள்ளது. இதற்கு முன்பு வங்கியின் அடிப்படை வட்டி விகிதம் 10.25 சதவீதமாக இருந்தது.

அடிப்படை வட்டி விகிதம் குறைந்திருப்பதால் அனைத்து கடன்களுக்குமான இஎம்ஐ குறைந்திருக்கிறது. இந்த வட்டிக் குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருவதாக வங்கி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

இந்த வங்கிகளின் தாய் வங்கியான எஸ்பிஐ வங்கி ஏப்ரல் 10-ம் தேதி முதல் அடிப்படை வட்டி விகிதத்தைக் குறைத்தது. எஸ்பிஐ-ன் அடிப்படை வட்டி விகிதம் 9.85 சதவீதமாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்