ஜிஎஸ்டியை அமல்படுத்தினால் ஊழலை ஒழிக்க முடியும்: நிதியமைச்சர் அருண் ஜேட்லி கருத்து

By பிடிஐ

`ஒரு நாடு, ஒரே வரி’ என்ற வரி முறையை கொண்டுவந்தால்தான் ஊழலை ஒழிக்க முடியும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு வரி நிலைகளையும் குறைக்கமுடியும் என்றும் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஒரே மாதிரி யான வரி விதிப்புக்கு வகை செய் யும் ஜிஎஸ்டி மசோதாவை நிறை வேற்ற மத்திய அரசு தீவிர நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வாரம் நாடாளுமன்றத்தில் ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு கருத்தரங்கம் இந்திய இஸ்லாமிக் கலாசார மையத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேசியதாவது: ஸ்பெக்ட்ரம் அல்லது நிலக்கரி ஊழல் விவகாரம் என முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற ஊழல் கள் இந்தியாவுக்கு பாதகமாக அமைந்தது. தற்போது `ஒரு நாடு, ஒரே வரி’ என்ற வரி முறை கொண்டு வருவது இந்தியாவுக்கு மிக முக்கியமானது. இந்த வரி முறை வரி நிலைகளை குறைப்பது மட்டு மல்லாமல் தொழில் துவங்குவதற்கு உண்டான வழிகளை திறந்து விடும். அதுமட்டுமல்லாமல் அனைத்து வகையிலும் ஊழல் நடப்பதை தடைசெய்யும்.

மறைமுக வரி விதிப்பினை இந்தியாவில் இருந்து அகற்ற வேண்டும். ஒரே மாதிரியான வரியை கொண்டு வரும் பொழுது மறைமுக வரி அமைப்பை இந்தியா பின்பற்ற வேண்டிய அவசியம் இருக்காது. தற்போது அனைத்து நிலைகளிலும் இந்தியாவுக்கு முதலீடுகள் தேவைப் படுகிறது. தனியார் துறையில் இருந்து தற்போது முதலீடுகள் வருகிறது. இது தொடர வேண்டும் என்றால் முதலீட்டுக்கு சாதகமாக சூழல் இருக்க வேண்டும். ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றினால் இந்திய மிகச் சிறந்த முதலீட்டு நாடாக மாறும். இவ்வாறு அருண் ஜேட்லி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

கல்வி

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்